பிரித்தானியா வரும் தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்களுக்கு புதிய விதி! வெளியான முக்கிய தகவல்
வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதி தொடர்பில் நாட்டின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா எல்லைகளை வெளிநாட்டவருக்கு திறக்க விரும்புகிறோம், அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறாம்.
அடுத்த இரண்டு வாரங்களில் பிரித்தானியாவிற்குள் கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படும் வெளிநாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்தும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தடுப்பூசி சான்றிதழ் முறைகள் இருப்பதால் அது சிக்கலாக இருக்கிறது.
எனினும், ஐரோப்பிய ஒன்றியம் சொந்த டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உருவாக்குகிறார்கள், அதனால் அது எளிதாக இருக்கிறது.
ஆனால், அமெரிக்கா டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கவில்லை என ஷாப்ஸ் கூறினார்.