பிரித்தானியா எப்போது முதல் இருளில் மூழ்கும்: எரிசக்தி தலைவர் வெளிப்படை
எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியாமல் போனால் மின்சாரம் துண்டிக்கப்படுவதை விட வேறு வழியில்லை
குறிப்பிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை
எதிர்வரும் குளிர்காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும், பிரித்தானியர்கள் எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் எரிசக்தி தலைவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
எரிவாயு இறக்குமதி சரிவடைந்தால், எதிர்வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மாலை 4 மணி முதல் 7 மணி வரையில் குடியிருப்புகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும். எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியாமல் போனால் மின்சாரம் துண்டிக்கப்படுவதை விட வேறு வழியில்லை எனவும் எரிசக்தி தலைவர் John Pettigrew தெரிவித்துள்ளார்.
@getty
ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில் இதுபோன்ற எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. போதுமான எரிவாயு கிடைக்காமல் போனால் குறிப்பிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரித்திருந்தது.
ஆனால், இந்த திட்டமிட்ட மின் தடையானது நாடாளுமன்றம் மற்றும் சார்லஸ் மன்னரின் ஒப்புதலுக்கு பின்னரே அமுலுக்கு வரும். குறித்த மின் தடையால் குடியிருப்புகள் மட்டுமின்றி, வணிகங்கள் மற்றும் மருத்துவமனைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், மின் தடையால் மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் இருக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள் என்ற அச்சமும் அதிகாரிகள் தரப்பில் எழுந்துள்ளது. பிரித்தானியா மட்டுமின்றி, இதே சூழலில் ஐரோப்பா மொத்தமும் சிக்கிக்கொண்டுள்ளது.
@getty
இதற்கு மொத்த காரணம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் கண்மூடித்தனமான படையெடுப்பு என்றே கூறுகின்றனர். ஜேர்மனி ஊடாக எஞ்சிய ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் தடை செய்துள்ளார்.
இந்த நிலையிலேயே திட்டமிட்ட மின் தடையை நோக்கி பிரித்தானியா செல்ல உள்ளது. ரஷ்யாவில் இருந்து எரிவாயுவை பிரித்தானியா இறக்குமதி செய்யவில்லை.
ஆனால் எரிவாயுவால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 40% வரையான மின்சாரத்தை பெற்று வருகிறது.
மேலும், ரஷ்ய எரிவாயுவை நம்பியிருக்கும் நாடுகளில் இருந்தே பிரித்தானியா மின்சாரம் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது.