இலவச பஸ் பாஸ் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
Prime Minister has announced that disabled people will be entitled to free bus from next year: அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என பிரதமர் ஆன்டி பர்னாம் அறிவிப்பு.
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலவச பஸ் பாஸ் தொடர்பில் ஒரு செய்தி
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இங்கிலாந்து முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 24 மணி நேரமும் இலவசப் பேருந்துப் பயணத்திற்குத் தகுதி பெறுவார்கள் என பிரதமர் ஆன்டி பர்னாம் அறிவித்துள்ளார்.

அன்றாட செலவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களைக் குறைப்பதற்கான பிரதமரின் சமீபத்திய முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ்களில் தற்போது உள்ள கால வரம்புகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீக்கப்பட உள்ளன.
தற்போது, இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ்கள், வார நாட்களில், காலை 9.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் இங்கிலாந்து முழுவதிலுமே ஒழிக்கப்பட உள்ளன.
இது குறித்து பேசிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பஸ் பாஸை பயன்படுத்திப் பயணிக்க முடியாதது சரியல்ல.
எனவே, நாங்கள் அதைச் சரிசெய்கிறோம். இனி மாற்றுத்திறனாளிகள் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் வரம்பற்ற இலவசப் பேருந்துப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

நான் இதை முன்பே கிரேட்டர் மான்செஸ்டரில் செய்திருக்கிறேன், இப்போது நாடு முழுவதற்குமாக அதைச் செய்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அத்துடன், மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதற்காகவும், விலைவாசி குறித்து கவலையில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானதான நிம்மதியை அளிப்பதற்காகவும் நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |