பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் அமுல் இருக்கும் அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
திங்களன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இடம்பெற்ற வழக்கமான கேள்வி பதில் அமர்வின் போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘கொரோனா உடன் வாழும்‘ திட்டத்தை முன்வைத்தார்.
பிப்ரவரி 24ம் திகதி முதல் கொரானா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சுய தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவையை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம்.
ஏப்ரல் 1 ஆம் திகதி வரை, தொற்றால் பாதிக்கப்படும் நபர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்துவோம்.
ஆனால் ஏப்ரல் 1 ஆம் திகதிக்குப் பிறகு, கொரோனா அறிகுறிகள் உடையவர்களை தனிப்பட்ட பொறுப்பைக் கடைப்பிடிக்க ஊக்குவிப்போம் என்று ஜான்சன் கூறினார்.
அதேபோல், பிரித்தானியாவில் ஏப்ரல் 1ம் திகதி முதல் இலவச கொரோனா பரிசோதனை முடிவுக்கு கொண்டு வருவோம்.
மேலும், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் கட்டுப்பாடுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இனி அது தொடராது என்றும் ஜான்சன் கூறினார்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் முன்வைத்துள்ள மாற்றங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.