Southport வன்முறை: தேசிய பொலிஸ் படைக்கு பிரித்தானிய பிரதமர் முக்கிய அறிவிப்பு
வன்முறை கோளாறுகளுக்கு உடனடி முடிவு கட்ட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் வெடித்த வன்முறை
பிரித்தானியாவின் Southport கத்திக்குத்து சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லங்காஷயர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் Southport பகுதியில் நடந்த சிறுவர்கள் கோடைக்கால முகாமில் புகுந்து சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்.//// இதில் 3 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், Southport, Hartlepool போன்ற பகுதியில் கலவரம் வெடித்தது.
அத்துடன் லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் கண்ணாடி போத்தல்கள் மற்றும் பீர் கேன்களையும் வீசி எறிந்து, “ எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டனர். இந்த போராட்டங்களுக்கு பின்பு EDL என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டுவதாகவும் பொலிஸார் நம்புகின்றனர்.
பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு
இந்நிலையில் “இந்த வன்முறை கோளாறுகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர புதிய தேசிய பொலிஸார் படையை பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் அறிவித்தார்.
மேலும், இந்த குண்டர்கள் நகர்ந்து கொண்டே இருப்பதாகவும், அவர்கள் சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகத்திற்கு மாறுவதாகவும், எனவே பொலிஸ் படைகளின் பதில்களும் அதையே செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உளவுத்துறை தகவல்களை பரிமாறுதல், முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பரந்த அளவில் பயன்படுத்துதல் மற்றும் சிலரின் நடமாட்டத்தை குற்றவியல் நடத்தை ஒழுங்கு ஆகியவற்றை பயன்படுத்தி தடுப்பு நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுடன் உள்ளடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |