இன்று கொரோனா தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள எச்சரிக்கை
மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக இன்று எச்சரித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பொதுமுடக்கம் சீக்கிரம் விலக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில், ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார் போரிஸ் ஜான்சன்.
ஸ்காட்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட இருக்கும் நிலையில், தானும் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது குறித்து அழுத்தத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கோடையை ஒப்பிடும்போது இப்போது இன்னமும் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக அதிகமாகவே இருப்பதால், நாடு சகஜ நிலைக்கு திரும்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளார் அவர்.
நமது ஐரோப்பிய நண்பர்கள் சிலர் நடுவில், இன்னமும் கொரோனா அதிகரித்தவண்ணமே இருப்பதை நாம் காணலாம் என்று கூறியுள்ளார் ஜான்சன்.
இந்த நோய் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது நமக்குத் தெரியும் என்று கூறியுள்ள ஜான்சன், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் நமக்கு அபாயம் இருக்கத்தான் செய்கிறது என்றார்.
பெரும்பாலான மக்களும் தொழில்துறையினரும், நாம் கவனமாக முன்னோக்கி செல்வதைத்தான் விரும்புகிறார்களேயொழிய, மீண்டும் பின்னடைவை சந்திப்பதை விரும்பவில்லை என்றார் அவர்.

