"அவர்கள் பொறுப்பற்ற கொடூரர்கள்" காலநிலை எதிர்ப்பாளர்களை கடுமையாக சாடிய பிரதமர் போரிஸ் ஜான்சன்!
பிரித்தானியாவில் காலநிலை எதிர்ப்பாளர்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் காலநிலை எதிர்ப்பாளர்களை நாட்டிற்கு சேதம் விளைவிக்கும், குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கும் 'பொறுப்பற்ற கொடுமைகள்' என்று கடுமையாக சாடியுள்ளார்.
செவ்வாக்கிழமை அன்று மான்செஸ்டரில் நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் LBC-க்கு அளித்த பேட்டியின் போது ஒரு கேள்விக்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், ஏற்கனவே லண்டன் முழுவதும் காலநிலை எதிர்ப்பாளர்கள் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
அக்டோபர் 4-ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆயிரக்கணக்கான காலநிலை எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பை மீறி லண்டன் நகரத்திற்குள் நுழைந்து, மத்திய ஆம்ஸ்டர்டாமில் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
Insulate Britain எனும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தெருக்களில் கூடி Blackwall Tunnel மற்றும் Wandsworth பாலத்தை முற்றுகையிட்டனர்.
இந்த மிகப் பெரிய எதிர்ப்பாளர்கள் குழு கடந்த மூன்று வாரங்களாக லண்டனின் பரபரப்பான சாலைகளில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இருப்பினும், பிரித்தானிய அரசாங்கம் அவர்களுக்கு சிறைத்தண்டனையும் அதிக அபராதமும் எச்சரிக்கை விடுத்தது, ஆனால் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வீதிகளை சீர்குலைத்ததாக அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்படுகிறது.
நேர்காணலின் போது, போரிஸ் ஜான்சன், "அந்த மக்களை நியாயமான எதிர்ப்பாளர்கள் என்று அழைக்கும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி இல்லை" என்று கூறினார்.
"அவர்கள் பொறுப்பற்ற கொடூரர்கள் என்று நான் நினைக்கிறேன், அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.