பிரித்தானியாவில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட பேரணி: அவசர COBRA கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு
பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இன்றிரவு அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பேரணிகளின் “பெரிய நாள்”
பிரித்தானியாவின் Southport பகுதியில் ஜூலை 29ம் திகதி Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய கொடூர சம்பவத்தின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.
இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அவசர COBRA கூட்டத்தை கூட்டினார்.
இந்நிலையில் தீவிர வலதுசாரிகள் பிரித்தானியா முழுவதும் மேலும் 30க்கும் மேற்பட்ட பேரணி கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இது தீவிர வலதுசாரி பேரணிகளின் பெரிய நாளாக என பார்க்கப்படுகிறது.
மீண்டும் அவசர கோப்ரா கூட்டம்
இதையடுத்து பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இன்றிரவு மீண்டும் 2வது முறையாக அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
COBRA (Cabinet Office Briefing Room A) என்பது உள்நாட்டு அமைதியின்மை, வெள்ளம் போன்ற அவசர சூழ்நிலைகளை கையாளுவதற்கு அழைக்கப்படும் கூட்டமாகும்.
புதிய அரசாங்கம் அமைந்த சில நாட்களிலேயே கூட்டப்படும் 2வது COBRA இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |