பன்முகத்தன்மை வாய்ந்த புதிய நாடாளுமன்றம்., முதல் உரையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பெருமிதம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) செவ்வாய்கிழமை House ofCommons சபையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
அப்போது, புதிய பிரித்தனைய நாடாளுமன்றம் இனம் மற்றும் பாலினத்தின் அடிப்படையில் மிகவும் வேறுபட்டது, பன்முகத்தன்மை வாய்ந்தது என பாராட்டினார்.
மேலும், தனது முதல் உரையில், எதிர்கட்சித் தலைவர் ரிஷி சுனக் (Rushi Sunak) எதிர்காலத்தில் வலுவான பணியை ஆற்ற அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சர் லிண்ட்சே ஹோய்ல் (Sir Lindsay Hoyle) மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்ற அவர், புதிய ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உலகின் எந்த நாடாளுமன்றத்திலும் காணப்படாத அளவிற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அதிக எண்ணிக்கையிலான எல்ஜிபிடி+ எம்பிக்களைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதில் தனது தொழிலாளர் கட்சி ஆற்றிய பங்கை எண்ணிப் பெருமைப்படுவதாகவும், அதேநேரம் மற்ற கட்சிகளின் பங்கையும் பற்றி பெருமைப்படுவதாகவும் கூறினார்.
"அரசியல் என்பது தேசத்தின் நன்மைக்கான ஒரு சக்தியாக இருக்க முடியும் என்பதை நாம் அனைவருக்கும் காட்ட வேண்டிய கடமை உள்ளது.
எனவே நமது அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், தேசிய புதுப்பித்தலுக்கான பொதுவான முயற்சியில் ஒன்றிணைந்து இந்த புதிய பாராளுமன்றத்தை சேவைக்கான பாராளுமன்றமாக மாற்றுவதற்கான நேரம் இது" என்று கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Speaker Sir Lindsay Hoyle, UK PM Keir Starmer addresses Parliament for first time