மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்: நெருக்கடிக்கு மத்தியில் பதவியை காப்பாற்ற போராட்டம்
நாங்கள் தவறு செய்துள்ளோம் என்பதை நான் அங்கீகரிக்கிறேன் பிரதமர் லிஸ் டிரஸ்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் ஐந்தாவது எம்.பி சர் சார்லஸ் வாக்கர், பிரதமர் பதவி விலக வேண்டும் என அழைப்பு.
பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் பதவிக்கு வந்த முதல் சில வாரங்களில் செய்த தவறுகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரதமர் லிஸ் டிரஸ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது அப்போதைய நிதியமைச்சர் குவாசி குவார்டெங்கின் வரி குறைப்பு மினி பட்ஜெட் நாட்டின் நிதி சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அத்துடன் டாலருக்கு எதிரான பவுண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்து, வட்டி மற்றும் அடமான விகிதங்கள் அதிகரித்து இங்கிலாந்து வங்கி தலையிட கட்டாயப்படுத்தும் நிலைக்கு அழுத்தம் அதிகரித்தது.
இதையடுத்து பிரதமர் லிஸ் டிரஸ், நிதியமைச்சர் குவாசி குவார்டெங்க்-கை பதவி இருந்து நீக்கி நாட்டின் புதிய நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட்-டை நியமித்தார்.
இருப்பினும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஐந்தாவது எம்.பி மற்றும் மூத்த பின்வரிசை உறுப்பினர் சர் சார்லஸ் வாக்கர், பிரதமர் லிஸ் டிரஸை பகிரங்கமாக பதவியில் இருந்து விலகுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து வரிக் குறைப்புகளையும் உள்ளடக்கிய மினி பட்ஜெட் தோல்வியடைந்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, முதல் முறையாக பேசிய பிரதமர் லிஸ் டிரஸ் “ நாங்கள் தவறு செய்து விட்டோம் என்பதை நான் அறிவேன், அந்த தவறுகளுக்காக நான் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது செய்த தவறுகளை சரி செய்து இருப்பதாகவும், புதிய நிதியமைச்சரை நியமித்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கத்தை மீட்டெடுத்து இருப்பதாகவும் பிரதமர் லிஸ் டிரஸ் ஒளிபரப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் நாம் உக்ரைன் போர் மற்றும் கடினமான பொருளாதார காலங்களில் இருக்கிறோம், இருப்பினும் நாங்கள் எங்கள் ஆற்றல் தொகுப்பை வழங்குகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கூடுதல் செய்திகளுக்கு: கேட் மற்றும் வில்லியமின் ஆரம்ப கால காதல் நாட்கள்: முன்னால் ராயல் சேவகர் வெளிப்படுத்தியுள்ள உண்மை!
இப்போது எனது பணி மக்களுக்கு வேண்டிய சேவைகளை தொடர்ந்து வழங்குவது மட்டுமே அதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.