'ஆண் ஆண் தான் பெண் பெண் தான்' பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சர்ச்சை கருத்து
திருநங்கைகள் குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தனது நிறைவு உரையில் பாலின விவாதம் குறித்த தனது நிலைப்பாட்டை ரிஷி சுனக் பகிர்ந்து கொண்டார். 'ஒரு ஆண் ஆண் தான் மற்றும் ஒரு பெண் பெண் தான்' என்று அவர் கூறினார்.
அவர் கூறுகையில் "மக்கள் தாங்கள் விரும்பும் பாலினமாக இருக்கலாம் - அவர்களால் முடியாது என்று நம்புவதற்கு நாம் கொடுமைப்படுத்தப்படக்கூடாது. ஒரு ஆண் ஆண் தான் மற்றும் ஒரு பெண் பெண் தான். அதை புரிந்து கொள்ள பொது அறிவு போதும்" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, சுனக்கின் கருத்துகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. சிலர் அவரது கருத்தை ஆதரித்தாலும், திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக பலர் கோபமடைந்தனர். அவருடைய கருத்துக்கள் "பொது அறிவுக்கு" வெகு தொலைவில் இருப்பதாக சிலர் அவரை கேலி செய்தனர்.
பிரித்தானியாவை உள்ள பெண் மருத்துவமனை வார்டுகளில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதை தடை செய்யும் திட்டத்தை அக்டோபர் 3-ஆம் திகதி சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே முன்மொழிந்ததை அடுத்து அவரது கருத்துக்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
Couldn't believe it when I heard these words coming out his mouth
— Julia M (@Julia_Milligan1) October 4, 2023
“We shouldn’t be bullied into thinking anyone can be any sex that they want to be. A man is a man and a woman is a woman, that is just common sense.”
Transphobic much? #trans #RishiSunak #PoliticsLive pic.twitter.com/sv3butBaad
மேலும், ஆசியாவில் பிறந்த முதல் பிரித்தானியப் பிரதமர் என்பதில் பெருமை கொள்வதாகவும் ரிஷி சுனக் கூறினார். பிரித்தானியா இனவெறி நாடு அல்ல என்பதற்கு அவரது நியமனம் சான்றாகும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
British Prime Minister Rishi Sunak, Rishi Sunak Controversy, Rishi Sunak Man is a Man Controversy