பிரதமர் பதவிக்கு ஆபத்து., ரிஷி சுனக் மீது நம்பிக்கையில்லா கடிதம் அனுப்பிய பெண் எம்பி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக முதன்முறையாக எம்.பி ஒருவர் நம்பிக்கையில்லாக் கடிதம் அளித்துள்ளார்.
பிரித்தானிய உள்துறை அமைச்சர் சுய்லா ப்ரூவர்மனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் பிரதமர் ரிஷி சுனக் தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.
இந்நிலையில், எம்பி ஆண்ட்ரியா ஜென்கின்ஸ், பிரதமர் ரிஷி சுனக் மீது நம்பிக்கையில்லா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பில் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்த பின்னர் பிரதமர் ரிஷி சுனக் தனது முதல் நம்பிக்கையில்லா கடிதத்தை எதிர்கொள்கிறார்.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு விசுவாசமான டோரி எம்பியான ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். சுனக்கிற்குப் பதிலாக ஒரு உண்மையான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ரிஷி சுனக் மீது சரமாரியாகப் புகார்களை முன்வைத்துள்ள ஆண்ட்ரியா ஜென்கின்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முடங்கி நின்ற போது துணிச்சலாகப் போராடியவர் தனது தலைவர் போரிஸ் ஜான்சன் என்றும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை ரிஷி சுனக் தான் நீக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், உண்மையைப் பேசியதற்காகவே உள் துறை அமைச்சராக இருந்த சுயல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் ரிஷி சுனக் இடதுசாரியாக மாறுவதாகவும் சாடியுள்ளார்.
Enough is enough, I have submitted my vote of no confidence letter to the Chairman of the 1922. It is time for Rishi Sunak to go and replace him with a 'real' Conservative party leader. pic.twitter.com/yJmGc14d75
— Andrea Jenkyns MP ?? (@andreajenkyns) November 13, 2023
பிரித்தானியாவில் ரிஷி சுனக் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த நம்பிக்கையில்லா கடிதம் அவரது பிரதமர் பதவிக்கு புது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை; இந்தியாவின் மேல்முறையீட்டை நிராகரித்த கத்தார் நீதிமன்றம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tory MP Andrea Jenkyns, MP Andrea Jenkyns submit letter of no confidence in UK Prime Minister Rishi Sunak, Home Secretary Suella Braverman sacked