பிரதமர் அலுவலக வாசலில் பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றிய ரிஷி சுனக்! வைரலாகிவரும் வீடியோ
ரிஷி சுனக் பிரதமர் அலுவலகத்தில் நுழைவதற்கு முன் இந்து பாரம்பரிய முறைப்படி வாசலில் விளக்கேற்றியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பிரபல ஊடகங்கள் உட்பட பலராலும் பகிரப்படும் இந்த வீடியோ குறித்த உண்மையான தகவல் வெளிவந்துள்ளது.
லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததையடுத்து, பேராதரவுடன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் அக்டோபர் 25 அன்று பொறுப்பேற்றார்.
இதன்மூலம் பிரித்தானியாவில் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை ரிஷி பெற்றுள்ளார். மேலும், ஒரு வெள்ளையர் அல்லாத முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
Getty Images
பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக், (எண் 10, டவுனிங் தெரு) பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன், வாசலில் இந்து பாரம்பரிய முறைப்படி பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
42 வயதான பிரதமர் ரிஷி சுனக் பெருமையுடன் பூஜைகளை செய்து தனது இந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்த வீடியோ குறிப்பாக ஆப்பிரிக்காவில் வைரலாகியுள்ளது, பல செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடக பிரபலங்கள் இதைப் பகிர்ந்துள்ளனர். ட்விட்டரில் 800,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட நைஜீரியாவின் மிகப்பெரிய செய்தித்தாள்களில் ஒன்றான PM News-ம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோ முதலில் ட்விட்டரில் @ThisIsAfricaTIA எந்த பக்கம் வெளியிடப்பட்டது, இது ஆப்பிரிக்க கலாச்சாரத்தின் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ட்விட்டர் கணக்கு.
விருது பெற்ற ஆப்பிரிக்க விளையாட்டு பத்திரிகையாளர் பெனடிக்ட் ஓவுசுவும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
The new UK PM performing his spiritual/traditional rituals before entering his new office. We have largely abandoned ours. pic.twitter.com/QMkeAkDkSC
— This Is Africa (@ThisIsAfricaTIA) October 25, 2022
இந்நிலையில், இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு மில்லியன் கணக்கானோர்களால் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
ஆனால், உண்மையில் இந்த வீடியோ இப்போது எடுக்கப்படவில்லை, பிரதமர் ரிஷியும் பிதமரான பிறகு இதுபோன்ற சடங்குகளை செய்ததாக தெரியவில்லை.
இந்த குறிப்பிட்ட வீடியோ தற்போது எடுக்கப்பவில்லை. இது 2020-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ரிஷி சுனக் முன்னதாக நிதி அமைச்சராக இருந்தபோது தனது அலுவலகத்திற்கு (எண் 11, டவுனிங் தெரு) வெளியே விளக்கேற்றி இந்து சடங்குகளைச் செய்தார்.
கெட்டி இமேஜஸ் படமாக்கிய இந்த வீடியோ, அப்போதும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
I’ve placed our rangoli outside No.11, the mithai are set to be delivered and the family Zoom is booked in.
— Rishi Sunak (@RishiSunak) November 14, 2020
I know things will feel a bit different, and it’s hard not to be able to see family, but we will get through this together.
Happy Diwali everyone! pic.twitter.com/4lDI8bH1HJ