ரிஷி சுனக்கால் முக்கிய பதவியில் அமர்ந்த நபர்! அவர் தாயார் ஒரு தமிழ்ப்பெண்... ஆச்சரிய தகவல்
சுயெல்லா பிரேவர்மேனின் தாய் ஒரு தமிழ்ப்பெண் என தகவல்.
மொரீஷியஸுக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சந்ததியியை சேர்ந்தவர் தான் உமா.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது.
லிஸ் டிரஸின் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின் நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக் கொண்டார்.
இந்த தவறுகளுக்காக பதவி விலகுவதே சரியான செயலாக இருக்கும் என கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ரிஷி சுனக் தலைமையிலான அமைச்சரவையில் விதிமீறலுக்காக பதவி விலகிய சுயெல்லாவை மீண்டும் உள்துறை செயலாளராக நியமித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
simonwalker/hm treasury/JON ATTENBOROUGH
இதனிடையில் சுயெல்லாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் தாயார் தமிழர் என தெரியவந்துள்ளது. சுயெல்லாவின் தந்தை பெயர் Christie Fernandes. அவரின் தாயார் பெயர் Uma (உமா) இவர் தமிழ்ப்பெண் ஆவார்.
உமா மொரிஷியஸில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார். அதாவது மொரீஷியஸுக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சந்ததியியை சேர்ந்தவர் தான் உமா.
உமா NHS இல் செவிலியராக 45 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார். அதன்படி நர்சிங் சேவையில் 45 வருடங்கள் பணியாற்றியதற்காக பிரிட்டிஷ் எம்பயர் மெடலை கடந்த 2018ல் மகாராணியிடம் இருந்து பரிசாக உமா பெற்றவர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
Delighted to join my mum today at Buckingham Palace to mark her British Empire Medal awarded for her 45 years of service to NHS nursing. Thanks @RoyalFamily for hosting a lovely afternoon. #amazingmum pic.twitter.com/JRiX8mGbHh
— Suella Braverman MP (@SuellaBraverman) May 31, 2018