பிரித்தானியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள்., ரூ.1320 கோடியை அறிவித்த பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சந்தித்தார்.
அப்போது, பிரித்தானிய பிரதமருக்கு ACE Programme நிறுவனர் Ebony-Jewel Rainford-Brent மற்றும் இயக்குனர் Chevy Green ஆகியோரால் ஜெர்சி வழங்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நடத்த உள்ளது.
அதேபோல், 2030-ஆம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நடத்தவிருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் 35 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ.1320 கோடி) தொகுப்பை அறிவித்தார்.
இந்தத் தொகை முதன்மையாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்களில், அனைத்து வானிலைகளையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 16 குவிமாடங்களைக் (all-weather domes) கட்டுவதற்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றபோது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டையும் பெற்றார்.
மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அமர்வில் பங்கேற்ற ரிஷி சுனக் பயிற்சியில் இருந்த வீரர்களுடன் அவர் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
British Prime Minister Rishi Sunak, Rishi Sunak visit England cricket team, Oval cricket ground in London, T20 Men's World Cup, T20 Women's World Cup