பிரித்தானிய பிரதமர் குடும்பத்தில் நேர்ந்த துயரம்., உருக்கமான நினைவுகளை பகிர்ந்த ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமரின் இளைய சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பாக்சிங் டே என கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் (டிசம்பர் 26), பிரித்தானிய பிரதமரின் சர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) இளைய சகோதரர் நிக் ஸ்டார்மர் (Nick Starmer) காலமானார.
60-வது வயதான நிக் ஸ்டார்மர் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த நிலையில் உயிரிழந்தார்.
கெய்ர் ஸ்டார்மர் தனது சகோதரரை பற்றி உருக்கமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
“எனது சகோதரர் நிக் ஒரு அற்புதமான மனிதர். அவர் வாழ்க்கை முன்னிறுத்திய சவால்களை துணிச்சலுடன், நகைச்சுவையுடன் எதிர்கொண்டார். அவர் எங்களால் மிகவும் நினைவுகூரப்படுவார்,” என அவர் கூறினார்.
சகோதரரின் மரணத்திற்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கும், அவரைப் பராமரித்த அனைவருக்கும் கெய்ர் ஸ்டார்மர் தனது நன்றியை தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு தன் குடும்பத்துடன் வீட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |