”விரைவில் அமைதி திரும்ப வலியுறுத்துவோம்” உக்ரைன் மொழியில் பேசிய பிரித்தானிய பிரதமர்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், பிரித்தானியாவின் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் "இந்த போர் ரஷ்யா மக்கள் உங்களின் பெயரில் நடைபெறவில்லை" என தாம் நம்புவதாக ரஷ்ய மக்களுக்கு வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து வருவதால், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறிவிட்டதாக கூறி பல மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் பலவற்றை விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வீடியோ பதிவை வெளியீட்டு அதில் உக்ரைன் மொழியில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகிற்கு சுகந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட உக்ரைன் வேண்டும் என்பதால் இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
To the people of Ukraine: Slava Ukraini.
— Boris Johnson (@BorisJohnson) February 25, 2022
To the people of Russia: I do not believe this war is in your name.
This crisis, this tragedy, can and must come to an end. Because the world needs a free and sovereign Ukraine. pic.twitter.com/ijbAAb8G67
இதை தொடர்ந்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் "இந்த போர் ரஷ்யா மக்கள் உங்களின் பெயரில் நடைபெறவில்லை" என தாம் நம்புவதாக ரஷ்ய மக்களுக்கு தமது கருத்தை வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் நிலப்பரப்பின் தெருக்களில் நடைபெறும் காட்சிகள் அங்குள்ள பெரும் சோகத்தைக் காட்டுகிறது. இளம் ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதும், உக்ரைனின் தெருக்களில் நகரங்களில் ராணுவ டாங்கிகள் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. உக்ரைனின் வானில் கண்ணமுடித்தனமாக ஏவுகணைகள் தாக்குதல் பொழிகின்றது.
இத்தகைய இரத்தக்கோலங்கள் ஐரோப்பா கண்டு இரண்டு தலைமுறைகள் இருக்கும், இத்தகைய தாக்குதல் மீண்டும் ஐரோப்பாவில் நடைபெறாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.