பிரித்தானியாவின் நலனுக்கே முன்னுரிமை! அமெரிக்க அழுத்தத்திற்கு ஸ்டார்மர் பதில்
நேட்டோ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படையினரின் இராணுவ நடவடிக்கையில் உதவ முன்வராததை அடுத்து பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்.
அத்துடன் நேட்டோ உறுப்பினர் அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறக்கூடும் என்றும் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் இராஜதந்திர நகர்வு

இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அந்நாட்டின் வெளியுறவு கொள்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நேட்டோ அமைப்பின் பெருமைகளை சுட்டிக்காட்டிய ஸ்டார்மர், உலகின் தலைசிறந்த இராணுவ கூட்டணி நேட்டோ என்றும், பிரித்தானியாவை பாதுகாப்பதில் நேட்டோவின் பங்கு மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் நேட்டோ அமைப்பிற்கான பிரித்தானியாவின் கடமைகளில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்கிருந்து அழுத்தம் வந்தாலும், பிரித்தானியாவின் நலனே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பிரித்தானியாவுக்கு தொடர்பு இல்லாத போரில் நாம் தலையிடப்போவதில்லை என்றும் தெளிவாக விவரித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் இந்த உரையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய உச்சி மாநாடு குறித்தும் அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |