சீனா, அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவிலும்... சிறார்களில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு
சீனாவில் கண்டறியப்பட்ட மர்மமான நிமோனியா பாதிப்பானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அடுத்து தற்போது பிரித்தானியாவில் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வேல்ஸில் 49 சிறார்கள்
சுகாதாரத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சுவாச தொற்று, மைக்கோபிளாஸ்மா நிமோனியாவால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வேல்ஸில் 49 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
@reuters
மேலும், பிரித்தானியாவில் இதே காலகட்டத்தில் 12 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. 2020க்கு பின்னர் பதிவாகியுள்ள தொற்றுநோய் பாதிப்பை ஒப்பிடுகையில், இது மிக அதிகம் என்றே சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு வரலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மேலும், சீனாவில் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பாடசாலைகளை கிருமி நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பரவக்கூடும் என்ற அச்சம்
ஆனால் கொரோனா போன்று இது புது தொற்றல்ல என சீன அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதனிடையே, சமீப நாட்களில் டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நிமோனியா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.
@reuters
அத்துடன் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் white lung syndrome என்ற மர்ம நிமோனியா பாதிப்பு தொடர்பில் ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என சரிபார்க்க எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |