ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள பிரித்தானியா
பிரித்தானியா மற்றும் போலந்து இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், வெள்ளிக்கிழமை வார்சாவில் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு குறித்து விவாதித்தனர்.
இந்த சந்திப்பானது, கெய்ர் ஸ்டார்மர் உக்ரைன் பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு நடந்துள்ளது.
கெய்ர் ஸ்டார்மர்-டொனால்ட் டஸ்க் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்
போலந்து பிரதமர், யூரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவராகவுள்ள நிலையில், அதன் முன்னுரிமைகளை ஸ்டார்மருக்கு விளக்கியுள்ளார்.
இச்சந்திப்பில், இருதரப்பு உறவுகள், அகதிகள் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு மீது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.
பால்டிக் மற்றும் வட கடல்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை 2025-இல் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன.
பிரித்தானியாவின் 4 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள எதிர்கால வான் பாதுகாப்பு திட்டத்தை போலந்துக்கு வழங்க, புதிய திட்ட அலுவலகத்தை ப்ரிஸ்டலில் திறக்கப்படுவதாக ஸ்டார்மர் அறிவித்தார்.
பிரித்தானியா-போலந்து ஒத்துழைப்பு, உக்ரைனுக்கு ஆதரவு மற்றும் யூத விரோதத்தை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஸ்டார்மர் உறுதி அளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Poland, UK and Poland to sign new security and defence treaty