பிரித்தானியாவில் தவறுதலாக கைதுசெய்யப்பட்ட சகோதர்கள்: போலீசாரின் செயலால் மக்கள் அதிர்ச்சி
பிரித்தானியாவில் மான்சேஸ்டர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கு பதிலாக ஷாசாத் ஹுசைன்(39) மற்றும் சரஸ் ஹுசைன்(36) ஆகிய நபர்களை ஆயுதம் ஏந்திய பொலிசார் கைது செய்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள மேற்கு யோர்க்ஷிரே (yorkshire) பொலிசார் கடந்த மாதம் மான்சேஸ்டர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காஷிஃபி ஹுசைன் (43) என்ற நபரை ப்ராட்போர்ட என்ற பகுதியில் தேடிவந்துள்ளனர்.
அப்போது ஹுசைன் என்ற இறுதி பேரை அடையாளமாக கொண்டு தவறுதலாக ஷாசாத் ஹுசைன்(39) மற்றும் சரஸ் ஹுசைன்(36) ஆகிய வாடகை கார் ஓட்டும் இரு சகோதர்களையும் ஆயுதம் ஏந்திய பொலிசார் கைது செய்துயுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை ஷாசாத் ஹுசைன்(39) என்பவர் அவரது வீட்டிற்கு முன்பு ஆயுதம் ஏந்திய போலீசார் நிற்பதை பார்த்துவிட்டு கதவை திறந்துள்ளார். ஷாசாத் ஹுசைன்(39) கதவை திறந்ததும் ஆயுதம் ஏந்திய பொலிசார் அவரை தாக்கி தரையில் சாய்த்து உள்ளனர்.
ஷாசாத் ஹுசைன்(39) எந்த காரணத்திற்காக கைது செய்யப்படுகிறோம் என கேட்டும் பதிலளிக்காத பொலிசார் அவரை கைது செய்து வெறும் காலுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது தற்செயலாக தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்த அவரது சகோதரர் ஷாசாத் ஹுசைன்(39) சலசலப்பு அதிகமாக கேட்டதால் நேரில்வந்து பார்த்துள்ளார். இந்த நிலையில் அவரையும் பொலிசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இறுதியில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கும், பொலிசார் தேடிய நபருக்கும் சம்பந்தம் இல்லை என தெரிய வரவே பொலிசார் அவர்களை விடிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஷாசாத் ஹுசைன்(39) தன்னை பொலிசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததாகவும், இதனால் அவரது எட்டு வயது ஆட்டிஸ்டிக் மகன் மற்றும் 18 மாத ஆண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு இடது கண்ணில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதால், இந்த கைது சம்பத்தில் ஈடுபட்ட பொலிசார் பொது வெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.