பொலிஸாரால் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் சில நாட்களாக காணாமல் போன பெண்ணின் உடல் பொலிஸாரால், ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன பெண்
பிரித்தானியாவில் லான்காஸ்டர் பகுதியை சேர்ந்த ஷானன் கேனிங்(24) என்ற இளம் பெண்ணை காணவில்லை, என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
@Lancashire Police
ஷானன் கேனிங் என்ற அந்த பெண், அருகிலிருந்த மதுகூடத்தில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கமாக அவர் மதுகூடத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் நேரத்துக்கு வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
ஆற்றில் கண்டெடுக்கபட்ட உடல்
இந்நிலையில் ஹல்டோனில் உள்ள லுனே ஆற்றில், பெண்ணின் உடல் தெரிவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண்ணின் உடலை மீட்டுள்ளனர்.
@Lancashire Police
இதனை தொடர்ந்து ஷானனின் பெற்றோரை வரவழைத்து விசாரிக்கையில், அது ஷானன் தான் என்பது உறுதியாகியுள்ளது.
டிப்பில் பார் என்ற மது கூடத்தில் வேலைக்கு வந்த பெண்ணை காணவில்லை என்ற சந்தேகத்தில், பொலிஸார் மது கூடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
@getty images
லான்காஸ்டர் காவல் நிலையத்தின் செய்தி தொடர்பாளர், நேற்று மாலை சரியாக 4 மணி அளவில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது, மேலும் இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றி, விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.