பொலிஸ் வேலையை தூக்கியெறிந்துவிட்டு 'கவர்ச்சி' நட்சத்திரமாக மாறிய பெண்! அவர் சொன்ன காரணம்?
பிரித்தானியாவில் ஒரு பெண் காவல்துறை அதிகாரி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு 'Adult' நட்சத்திரமாகவும் மில்லியனராகவும் மாறியுள்ளார்.
தற்போது 27 வயதாகும் Charlotte Rose, 2014-ல் தனது வேலையை விட்டு விலகியுள்ளார். பிரித்தானிய காவல் துறை ஆண் ஆதிக்கம் நிறைந்ததாக இருப்பதாகவும், அது தனக்கு பிடிக்காததால் மனமுடைந்து இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறுகிறார்.
ஆனால், பணியை ராஜினாமா சொத்திலிருந்து Charlotte Rose இப்போது ஒரு மில்லியனராகிவிட்டார், மேலும் ஒரு லம்போர்கினி காரையும் வைத்திருக்கிறார். காரணம் அவர் தற்போது Adult நட்சத்திரமாக வளம் வருகிறார்.
ரோஸ் இப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஓன்லைனில் பகிர்வதன் மூலம் வருடத்திற்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதித்து வருகிறாராம்.
வேலையிலிருந்து விலகியபோது அவரது தோழி ஒருவர், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான போட்டோஷூட்டில் கவர்ச்சி அழகியாக போஸ் கொடுக்க அழைத்ததாகவும், அதிலிருந்து அவர் கவர்ச்சி அழகியாக மாறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.