சாராவை கடத்தி துஷ்பிரயோகம் செய்து கொன்று எரித்த பொலிஸ் அதிகாரி! பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அரிய தண்டனை
பிரித்தானியாவை உலுக்கிய சாரா எவரார்ட் கொலை வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் அரிய தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தெற்கு லண்டனில் கடந்த மார்ச் 3ம் திகதி மாலை, அருகில் உள்ள நண்பர் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு நடந்து வந்துக்கொண்டிருந்த சாரா எவரார்ட் என்ற 33 வயதான சந்தைப்படுத்தல் நிர்வாகி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையின் ஒரு பகுதியாக பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, Wayne Couzens என்ற பொலிஸ் அதிகாரி சாராவை வலுகட்டயாமாக காரில் ஏற்றி அழைத்துச்சென்றது தெரியவந்தது.
மார்ச் 9ம் திகதி Kent-ல் Deal பகுதியில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் Wayne Couzens-ஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பத்தன்று (மார்ச் 3) Wayne Couzens, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக சாராவை கைது செய்து, காரில் Kent-க்கு கடத்தி வந்து துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்து, பின் மீதமிருந்த எச்சங்களை அருகே உள்ள இடத்தில் புதைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து, Kent, Ashford-க்கு அருகே சாராவின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜூன் 8ம் திகதி அன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் , சாராவை கடத்தி மற்றும் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தை Wayne Couzens ஒப்புக்கொண்டு அவரது மரணத்திற்கு பொறுப்பேற்றார், மேலும் ஜூலை 9 அன்று அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், இன்று செப்டம்பர் 30ம் திகதி குற்றவாளி Wayne Couzens-க்கு மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.