பிரித்தானியாவில் அதிகரிக்கும் மத வெறுப்பு குற்றங்கள்: புள்ளிவிவரங்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் மத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதை புதிய புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
பிரித்தானியாவில் அதிகரிக்கும் மத வெறுப்பு குற்றங்கள்
பிரித்தானியாவின் சில பொலிஸ் படைகளின் அறிக்கைகளில் கடந்த 18 மாதங்களில் குறிப்பிட்ட அளவு மத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து இருப்பது பார்க்க முடிகிறது.
இவை குறிப்பாக 2023ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் இந்த ஆண்டு கோடையில் நடந்த சவுத் போர்ட் தாக்குதலுக்கு பிறகு மத வெறுப்பு குற்றங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர், மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளில், 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து யூத எதிர்ப்பு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்து இருப்பதையும், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சவுத்போர்ட்டில் நடந்த துயரமான கத்தித் தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமிய விரோத குற்றங்கள் அதிகரித்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.
உதாரணமாக, கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 13 யூத எதிர்ப்பு குற்றங்களை பதிவு செய்து இருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது அக்டோபரில் 85 ஆகவும் நவம்பரில் 68 ஆகவும் உயர்ந்து பின்னர் குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
இதைப்போல, 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் மாதத்திற்கு சராசரியாக 39 இஸ்லாமிய விரோத குற்றங்களை பதிவு செய்த மாதத்திற்கு சராசரியாக 39 இஸ்லாமிய விரோத குற்றங்களை பதிவு செய்து இருந்தது. ஆனால் 3 குழந்தைகள் வரை கொல்லப்பட்ட சவுத் போர்ட் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமிய விரோத குற்றங்கள் ஆகஸ்டில் 85 என்ற குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.
மெட்ரோ பொலிட்டன் பொலிஸும் இதே போன்ற மத வெறுப்பு குற்றங்களின் போக்கை காட்டியுள்ளன.
இந்த புள்ளிவிவரங்கள் பிரித்தானியாவில் மத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |