பிரித்தானியாவில் பொலிஸார் மீட்ட ஸ்மார்ட் உடையணிந்த நாய்: வைரலாகும் புகைப்படம்
பிரித்தானியாவில் செல்லப்பிராணி நாயுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் காரில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் வருகிறது.
மீட்கப்பட்ட செல்லப்பிராணி
ஆகஸ்ட் 18ம் திகதி வெள்ளிக்கிழமை செல்லப்பிராணி நாய் ஒன்று குறித்து பார்வையாளர்கள் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, நாயின் நலனை குறித்து ஆராய்வதற்காக பிரித்தானியாவில் பிளாக் கன்ட்ரி பகுதிக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சென்று இருந்தனர்.
தன்னுடைய செல்லப்பிராணி நாயை கவனிக்க முடியாத அளவிற்கு உரிமையாளர் மதுபோதையில் இருந்ததை தொடர்ந்து, அந்த நாயை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
In Britain, police officers confiscated a dog from an drunken owner who was too drunk to look after the pet.
— NEXTA (@nexta_tv) August 27, 2023
The dog was wearing a smart denim shirt. The photo with the dog went viral on the Internet and caused a wave of memes and jokes.
The police assured that the dog will… pic.twitter.com/yZIVo1Z5us
இந்த பறிமுதல் நடவடிக்கையின் போது காவல்துறை வாகனத்தின் முன் இருக்கையில் அமர வைக்கப்பட்டு இருந்த நாய், ஸ்மார்ட்டான டெனிம் சட்டை அணிந்து இருந்ததோடு புகைப்படத்திற்கு துடிப்பான போஸ் ஒன்றையும் வழங்கியது.
இந்நிலையில் இந்த புகைப்படம் இணைய தளத்தில் வேகமாக பரவியதுடன் மீம்ஸ்களையும், ஜோக்குகளையும் கிளப்பி வருகிறது.
தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்
குடிபோதை உரிமையாளரிடம் இருந்து மீட்கப்பட்ட நாய்க்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர். மேலும் விரைவில் நாய் புதிய உரிமையாளரின் கவனிப்புக்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் வைரலான நாயின் புகைப்படத்திற்கு கீழ் நபர் ஒருவர் போட்டாவிற்காக நாய்க்கு நீங்கள் உடை அணிவித்தீர்களா என்று கேட்டதற்கு, பேஷன் குற்றத்தை நாங்கள் செய்வது இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா! என்று பொலிஸார் பதிலளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |