பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: இந்திய அரசின் நடவடிக்கை
இந்திய இளம்பெண்ணொருவர் கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், இந்தியா சில நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருமணமாகி தன் கணவருடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்தார் ஹர்ஷிதா ப்ரெல்லா (24) என்னும் இளம்பெண்.
ஹர்ஷிதாவும் அவரது கணவரான பங்கஜ் லம்பாவும் (23) இங்கிலாந்தின் Northamptonshireஇலுள்ள Corby என்னுமிடத்தில் வழ்ந்துவந்தார்கள்.
இந்நிலையில். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஹர்ஷிதா.
ஹர்ஷிதாவை அவரது கணவரான பங்கஜ் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்திய அரசின் நடவடிக்கை
பங்கஜ் இந்தியாவில் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, டெல்லி பொலிசார் நடவடிக்கை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
அதன்படி, இந்திய பொலிசார் பிரித்தானிய பொலிசாருக்கு letter rogatory ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.
இந்த letter rogatory என்பது என்னவென்றால், ஒரு நாட்டிலுள்ள அதிகாரிகள், மற்றொரு நாட்டிலுள்ள அதிகாரிகளிடம், வழக்கு ஒன்று தொடர்பிலான ஆவணங்களை முறைப்படி கோரும் கடிதம் ஆகும்.
அவ்வகையில், டெல்லி பொலிசார், ஹர்ஷிதாவின் கொலை வழக்கு தொடர்பில் அவரது மருத்துவமனை ஆவணங்கள், உடற்கூறு ஆய்வு முடிவுகள் முதலான பல ஆவணங்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு பிரித்தானிய அரசைக் கோரியுள்ளார்கள்.
இதற்கிடையில், பங்கஜின் குடும்பத்திலுள்ள அனைவரும் ஏற்கனவே இந்தியாவில் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர் மட்டும் இன்னமும் பொலிசில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |