வீட்டுக்கு தெரியாமல் நள்ளிரவில் லண்டன் சென்ற சிறுமி மாயம்; தீவிர விசாரணையில் பொலிஸ்

Police London United Kingdom Fatuma Kadir Girl Missing
By Ragavan Jul 24, 2021 07:30 AM GMT
Report

பிரித்தானியாவில் நள்ளிரவில் கிரேட்டர் மான்செஸ்டர் நகரத்திலிருந்து லண்டன் சென்ற 11 வயது சிறுமியை பொலிஸார் தேடிவருகின்றனர்.

Bolton-ல் வசிக்கும் அஷீமா மற்றும் மிஸ்ரா ஆகியோரின் மகளான ஃபாத்துமா காதிர் (Fatuma Kadir) எனும் 11 வயது பள்ளி மாணவி நேற்று லண்டன் பகுதியில் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஃபாத்துமாவின் பெற்றோர் ஃபாத்துமா வியாழக்கிழமை இரவு 10.45 முதல் காணவில்லை என பொலிஸில் தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து மான்செஸ்டர் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

வீட்டுக்கு தெரியாமல் நள்ளிரவில் லண்டன் சென்ற சிறுமி மாயம்; தீவிர விசாரணையில் பொலிஸ் | Uk Police Seek Girl 11 Travelled To London Euston

அதில் ஃபாத்துமா முதலில் பால்டனிலிருந்து கிரேட்டர் மான்சேஸ்டருக்கு ரயிலில் சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து மற்றோரு ரயில் மாறி வெள்ளிக்கிழமை அதிகாலை 1.13 மணியளவில் London Euston ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர் அங்கு வந்ததற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அப்போது அச்சிறுமி மான்சேஸ்டருக்கு வந்த அதே ரயிலில், அவருடன் வேறொரு தம்பதியினர் பயணித்துள்ளனர்.

வீட்டுக்கு தெரியாமல் நள்ளிரவில் லண்டன் சென்ற சிறுமி மாயம்; தீவிர விசாரணையில் பொலிஸ் | Uk Police Seek Girl 11 Travelled To London Euston

அந்த தம்பதியினருக்கு சிறுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர்கள் இருவரும் லண்டனுக்கும் செல்லவில்லை. ஆனால், அவர்களை விசாரித்தால் ஒருவேளை சிறுமி எங்கு செல்கிறார் என்பது தெரிய வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர். அதனால், ஃபாத்துமாவுக்கு அருகில் அவர்கள் நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஃபாத்துமா வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் லண்டன் சுரங்கவழி குழாய் ரயில் நிலையத்தில் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது டவர் பிரிட்ஜ் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் தான் இருக்கக்கூடும் என்று பொலிஸார் நம்புகின்றனர்.

வீட்டுக்கு தெரியாமல் நள்ளிரவில் லண்டன் சென்ற சிறுமி மாயம்; தீவிர விசாரணையில் பொலிஸ் | Uk Police Seek Girl 11 Travelled To London Euston

இந்நிலையில் சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டு பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், Fatuma Kadir எனும் 11 வயது ஆசிய சிறுமி, உயரம் 5 அடி 2 அங்குலம் (1.6 மீற்றர்) தனியாக Euston ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். கடைசியாக அவர் கருப்பு நிற புர்கா உடையில் காணப்பட்டார், என கூறப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US