லண்டனில் காரில் வந்த ஜோடியை தடுத்து நிறுத்திய பொலிசாருக்கு தெரிந்த உண்மை! 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
லண்டனில் பைக்குள் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு ஜோடிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் சுட்டனை சேர்ந்த Bradley Clancy (39) மற்றும் Bekki Dean (27) தம்பதிக்கு தான் Croydon Crown நீதிமன்றத்தில் நேற்று தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அதன்படி Bradleyக்கு 12 ஆண்டுகள் மற்றும் Bekkiக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் காரில் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்திற்காக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த அவர்களின் காரை நிறுத்திய பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது தான் குறித்த பொருட்கள் இருப்பதை பார்த்த பொலிசார் அதிர்ந்தனர்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையிலேயே நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
டிடெக்டிவ் கான்ஸ்டெபிள் ஆண்டி ஸ்னேசெல் கூறுகையில், தீவிர விசாரணையின் விளைவாகவே இருவரும் பிடிபட்டனர்.
இந்த தண்டனை முடிவுகள் காவல்துறையும் நீதிமன்றங்களும் துப்பாக்கி குற்றங்களை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கின்றன என்பதைக் காட்டுகின்றன, மேலும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவாக,இருவரும் கணிசமான எண்ணிக்கையிலான வருடங்களை சிறை கம்பிகளுக்கு பின்னால் தான் செலவிடுவார்கள் என கூறியுள்ளார்.
