புலம்பெயர்வோரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்: பிரித்தானிய அரசியல்வாதி
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடுவோம் என்றும், பிரான்ஸ் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர்.
சமீபத்தில், மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்வோர் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தது நினைவிருக்கலாம்.

அப்போது ஸ்பெயின் அவர்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்து, தங்களுக்கும் ஒரு திட்டம் உருவாகியுள்ளது என பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
புலம்பெயர்வோரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்
ஸ்பெயின், புலம்பெயர்வோர் விடயத்தில் கிட்டத்தட்ட ஒரு ராணுவ நடவடிக்கை எடுப்பது போல நடந்துகொண்டதாகக் கூறுகிறார் யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப்.

புலம்பெயர்வோர் ஸ்பெயினுக்குள் நுழைய முற்பட்டபோது, ஸ்பெயின் ராணுவ வீரர்கள் போராயுதங்களைக் கையில் வைத்திருந்தது போல் இருந்தது என்றும், அவர்கள் புலம்பெயர்வோர் மீது நேரடியாக பெப்பர் ஸ்பிரே அடித்ததை தான் கண்டதாகவும், ஒரே நாளில் சுமார் 40,000 சட்ட விரோத புலம்பெயர்வோரை ஸ்பெயினால் திருப்பி அனுப்ப முடிந்ததை தான் கண்டதாகவும் தெரிவித்துள்ளார் யூசஃப்.
ரீஃபார்ம் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்றும், பிரான்ஸ் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் யூசஃப்.
ஸ்பெயின் மொராக்கோ நாட்டு புலம்பெயர்வோரைக் கையாண்ட விதத்தைப் பார்த்தே தங்களுக்கு இப்படி ஒரு யோசனை உருவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |