யாருக்கு வாக்கு? கருத்துக்கணிப்பில் பிரித்தானிய பிரதமரின் கட்சியை முந்திய கட்சி
பிரித்தானியாவில் நாளை தேர்தல் நடந்தால், மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிவதற்காக, கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
கருத்துக்கணிப்பின் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.
பிரதமரின் லேபர் கட்சியை முந்திய கட்சி
ஆம், கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பிரித்தானியர்களில் 25 சதவிகிதம் பேர், Nigel Farageஇன் Reform UK கட்சிக்குதான் வாக்களிப்போம் என்று கூறியுள்ளார்கள்.
அதற்கு அடுத்தபடியாகத்தான் ஆளும் கட்சியான, பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் லேபர் கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். லேபர் கட்சிக்கு 24 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
ஆக, கருத்துக்கணிப்பின்படி நாளை தேர்தல் நடந்தால் Nigel Farage கட்சி ஆட்சிக்கு வந்துவிடுமா?
வாய்ப்பில்லை, ஏனென்றால், Reform UK கட்சியில் மொத்தமே 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள்.
என்றாலும், இது, ஆளும் லேபர் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணி. ஆளும் கட்சி மீது மக்களுக்கு திருப்தி இல்லை என்பதையே இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் காட்டுகின்றன எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |