லிஸ் ட்ரஸ் ராஜினாமா: வருத்தத்துடன் பிரதமர் அலுவலகத்தில் பேசியது என்ன?
பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
பிரித்தானியாவின் மிக குறுகியகால பிரதம மந்திரி ஆனால் லிஸ் ட்ரஸ்.
லிஸ் ட்ரஸ் 44 நாட்களுக்குப் பிறகு இன்று (அக்டோபர் 20) கர்சார்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், பிரித்தானியாவின் மிக குறுகியகால பிரதம மந்திரி ஆனார் லிஸ் ட்ரஸ்.
இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு டவுனிங் ஸ்ட்ரீட்டில் பேசிய அவர், தனது குழப்பமான மற்றும் நெருக்கடியான பிரதமர் பதவிக்கு எதிராக டோரி எம்.பி.க்களின் வெளிப்படையான கிளர்ச்சிக்குப் பிறகு தான் ராஜினாமா செய்வதாக நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கன்சர்வேடிவ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டேன், இருப்பினும் தற்போதையை தேவையை தன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
"எனவே, நான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் ராஜாவிடம் பேசினேன்" என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, தனது கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பதாக அவர் கூறினார்.
getty images
ட்ரஸின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் சந்தைகளிலும் அவரது சொந்தக் கட்சியிலும் குழப்பத்தைத் தூண்டியது. பெரும்பாலான டோரி எம்பிக்கள் டிரஸை ராஜினாமா செய்யுமாறு பகிரங்கமாக வற்புறுத்தினர்.
அவர்களில் பலர் அவரது அரசாங்கத்தை நீடிக்க முடியாதது உறுதியாக தெரிவித்ததை அடுத்து, 6 வாரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
ட்ரஸ் தனது கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, செப்டம்பர் 6 அன்று பிரதமரானார்.
கடந்த மாதம் அவரது மினி-பட்ஜெட் நிதிச் சந்தைகளை பயமுறுத்தியது, பிரிட்டிஷ் பவுண்ட் வீழ்ச்சியைத் தூண்டியது மற்றும் அவரது நிதி அமைச்சரை மாற்றும்படி கட்டாயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.