சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தவேண்டும்: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரைக் கட்டுப்படுத்த, பிரித்தானிய முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் கங்கணங்கட்டிக்கொண்டு செயல்பட்டதை அறிவோம்.
அவருக்குப் பின்வந்தவர்களும் அதையே செய்ய விரும்புகிறார்கள், பிரதமர் உட்பட...
சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தவேண்டும்
இந்நிலையில், சட்ட விரோத புலம்பெயர்வோரை மட்டுமல்ல, சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
பல்வேறு நாடுகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதையும், அந்த காலியிடங்களை நிரப்ப அவர்கள் புலம்பெயர்வோரை நம்பியிருப்பதையும் குறித்து ஏராளம் செய்திகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளன.
ஆனாலும், சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி.
பிரித்தானிய அரசு என்னதான் எதிர்பார்க்கிறது?
பல்வேறு பணியிடங்களுக்கு புலம்பெயர்ந்தோர் தேவை. ஆனால், சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தவேண்டும் என்கிறார் பிரதமர் என்றால், அதற்கு என்னதான் பொருள்? பிரித்தானிய அரசு என்னதான் எதிர்பார்க்கிறது?
அதாவது, பொதுவாகவே எந்த நாடானாலும், தன் நாட்டுக்குப் புலம்பெயர்வோரைக் குறித்து, குறைந்தது இரண்டு விடயங்களை கவனிக்கின்றன.
ஒன்று, புலம்பெயர்வோரால் தன் நாட்டுக்கு பொருளாதாரம் உட்பட, ஏதாகிலும் நன்மை உள்ளதா, இரண்டாவது, அவர்களால் நாட்டுக்கு நஷ்டம் உள்ளதா, அதாவது, அவர்கள் புலம்பெயர்ந்து வந்து தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாகிவிடுவார்களா என்பதுதான் அந்த இரண்டு விடயங்கள்.
BBC
அப்படியிருக்கும் நிலையில், 2022ஆம் ஆண்டில் மட்டுமே உக்ரைனிலிருந்து 170,000 பேரும், ஹொங்ஹொங்கிலிருந்து 76,000 பேரும், கல்வி கற்பதற்காக என 270,000 பேரும் பிரித்தானியாவுக்கு வந்தால் என்ன ஆவது.
ஆக, நாட்டுக்கு இலாபம் தரும் வகையில் வருபவர்களைக் குறித்து கவலை இல்லை, இப்படி நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமையாக வருபவர்கள்தான் பிரித்தானியாவுக்குப் பிரச்சினை.
இந்நிலையில், கல்வி கற்க வருபவர்கள் தங்கள் குடும்பத்தினரை வேறு பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளும் ஒரு நிலையும் இருக்கிறது.
ஆகவேதான், இவ்வளவு நாட்களும் சட்ட விரோத புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதைக் குறித்து பேசிக்கொண்டிருந்த பிரித்தானிய அமைச்சர்கள், இப்போது சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதைக் குறித்தும் கவலைப்படத் துவங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.