பிரித்தானியாவின் பிரபல காதல் ஜோடி: 3 ஆண்டுகளுக்கு பின் திருமண நிச்சயதார்த்தம்: குவியும் வாழ்த்துக்கள்
பிரித்தானியாவின் ஊடக பிரபலங்களான டைலர் வெஸ்ட், மோலி ரெயின்ஃபோர்டு ஜோடி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
பிரபல காதல் ஜோடி
தெற்கு லண்டனைச் சேர்ந்த டைலர் வெஸ்ட் (Tyler West) பிபிசி ஊடக தொகுப்பாளர், வானொலி தொகுப்பாளர் மற்றும் டிஜே என பிரபலமான நபர் ஆவார்.
இவரும் நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளியான மோலி ரெய்ன்ஃபோர்டும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் தாங்கள் டேட்டிங் செய்வதை இருவரும் மறுத்த நிலையில், பின்னர் இந்த ஜோடி ஒரு டிக்டோக் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இவர்களின் உறவு உறுதியானது.
கடந்த ஆண்டு டைலரும், மோலியும் தங்கள் முதல் வீட்டிற்கு ஒன்றாகக் குடிபெயர்ந்து, தங்கள் வீட்டு மேம்பாட்டுப் பயணத்தை தங்கள் பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.
டைலர் வெஸ்ட் - மோலி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் திருமணம் எப்போது என்ற ஆர்வமும் அவர்களுக்கு நிலவி வந்தது.
திருமண நிச்சயதார்த்தம்
இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் ஒன்றாக இருந்த பிறகு காதல் ஜோடி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளன. ரசிகர்கள் பலரும் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
2022ஆம் ஆண்டு பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த இந்த பிரபல ஜோடி பிறகு காதலில் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |