பிரித்தானியாவில் ரஷ்யா தொடர்பான அனைத்து கப்பல்களுக்கும் தடை: போக்குவரத்துக்கு துறை அதிரடி
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அனைத்து துறைமுகங்களிலும் ரஷ்ய தொடர்புடைய கப்பல்கள் இயங்க தடைவிதிக்கப்படுவதாக பிரித்தானியாவின் போக்குவரத்து துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதால், ரஷ்யா மீது பிரித்தானியா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில் பிரித்தானியாவிற்கு சொந்தமான துறைமுகங்களில் ரஷ்ய நாட்டுடன் தொடர்புடைய அனைத்து கப்பல்களுக்கும் நுழைய தடை விதிக்கப்படுவதாக பிரித்தானிய போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை கடந்த திங்கள்கிழமை பிரித்தானியாவின் போக்குவரத்து துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டார்.
Today I've written to all UK ports asking them not to provide access to any Russian flagged, registered, owned, controlled, chartered or operated vessels.
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) February 28, 2022
Given Putin's action in #Ukraine I've made clear these vessels are NOT welcome here with prohibiting legislation to follow. pic.twitter.com/5pKzfvcbGi
அதில் ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான அரசு மற்றும் தனியார் கப்பல்கள், ரஷ்யாவின் தேசிய கோடி பொறிக்கப்பட்ட கப்பல்கள், மற்றும் ரஷ்ய பங்குதாரர்களை கொண்ட கப்பல்கள் என ரஷ்ய நாட்டுடன் தொடர்புடைய அனைத்து கப்பல்களையும் பிரித்தானிய கப்பல் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானிய துறைமுகங்களில் இயங்கும் ரஷ்ய கப்பல்களை கண்டறிய துறைமுகங்களுக்கு பிரித்தானிய போக்குவரத்துக்கு துறை துணைபுரியும் எனவும், ரஷ்ய கப்பல்கள் நடமாட்டத்தை ஏதேனும் பிரித்தானிய துறைமுகங்களில் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட துறைமுகத்திற்கு நேரடியாக தொடர்புகொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களின் வான்வழிகளை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உத்தரவிற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.