இது ஒரு நல்ல வாய்ப்பு... அமெரிக்க தேர்தல் தோல்வி குறித்து பிரித்தானிய பிரதமர் கருத்து
US midterm defeat for Trump, opportunity to end Iran conflict and tackle cost of living, says Burnham: அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்புக்கு கிடைத்துள்ள தோல்வி, ஈரான் போர் முதலான விடயங்களை முடிவுக்குக் கொண்டுவர நல்லதொரு வாய்ப்பு என்று கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
அமெரிக்க இடைத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்துள்ளது குறித்து பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இது ஒரு நல்ல வாய்ப்பு
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆன்டி பர்னாம், நம் எல்லோரையும் பாதித்துள்ள விடயத்தை, அதாவது, விலைவாசி உயர்வு தொடர்பில் ஒன்றிணைய, இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து கடந்த மூன்று மாதங்களாக பேசி வருகிறோம், நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
ஆனாலும் மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர் முடியும்வரை விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
அத்துடன், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் ஆன்டி பர்னாம்.