ருவாண்டா திட்டம் ரத்து என கூறிய பிரித்தானிய பிரதமரின் புதிய நாடுகடத்தும் திட்டம்: ஒரு அதிர்ச்சித் தகவல்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தனது தேர்தல் வாக்குறுதியில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் ரிஷி சுனக் அரசின் திட்டத்தை ரத்து செய்ய இருப்பதாகக் கூறினார்.
தான் சொன்னதுபோலவே ருவாண்டா திட்டத்தை ரத்தும் செய்தார் ஸ்டார்மர்.
Credit: The Mega Agency
ஆனால், அதற்கு பதிலாக மற்றொரு நாடுகடத்தும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் ஸ்டார்மர் என்னும் அதிர்ச்சியளிக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமரின் புதிய நாடுகடத்தும் திட்டம்
சட்டவிரோதமாக சிறு படகுகளில் வருவோரை அட்லாண்ட்க் பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்றிற்கு நாடுகடத்தும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் கையெழுத்திட்டுள்ளார்.
Credit: Alarmy
அதன்படி, Chagos தீவுகளில் கால்வைப்போர், 5,000 மைல் தொலைவில் அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ள St Helena என்னும் தீவுக்கு நாடுகடத்தப்பட இருக்கிறார்கள்.
ஸ்டார்மரின் இந்த நடவடிக்கையை, ருவாண்டா திட்டத்தை ரத்து செய்வதுபோல் செய்துவிட்டு தற்போது புதிய திட்டம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ள ஸ்டார்மர், மோசமான அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
Credit: PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |