மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்பில் விவாதிக்க ஜேர்மனி செல்லும் பிரித்தானிய பிரதமர்
இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் நிலையில், அது குறித்து விவாதிப்பதற்காக இன்று ஜேர்மனி செல்கிறார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
ஜேர்மனி செல்லும் பிரித்தானிய பிரதமர்
ஜேர்மனி செல்லும் ஸ்டார்மர், அங்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடன் மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பில் விவாதிக்க இருக்கிறார்.
ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள், நீண்ட நாட்களாக செய்து முடிக்கப்படாமல் இருக்கும் பிணைக்கைதிகள் விடுவிப்பு, உடனடி போர் நிறுத்தம், மனிதநேய உதவிகளை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.
இந்த விடயங்களைச் செய்தல், மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட கால மற்றும் மற்றும் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |