மரிஜூவானா மனரீதியாக உதவிய மருந்து! போதைப்பொருள் பயன்பாடு குறித்து இளவரசர் ஹரி விளக்கம்
மரிஜூவானா தனக்கு மனரீதியாக உண்மையில் உதவிய மருந்து என பிரித்தானியா இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு
அரச குடும்பத்துடன் கருத்து வேறுபாட்டை கொண்டு இருக்கும் இளவரசர் சசெக்ஸ் டியூக், அரச குடும்பத்தின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை வெளிபடுத்தி வருகிறார்.
இதனால் கோபமடைந்ததாக கூறப்படும் மன்னர் மூன்றாம் சார்லஸ், எலிசபெத் மகாராணியார் இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு வழங்கிய Frogmore மாளிகையில் இருந்து வெளியேற உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.
Zoom
இந்நிலையில் எழுத்தாளர் டாக்டர் கபோர் மேட் உடனான நேரடி ஒளிபரப்பு உரையாடலில் கலந்து கொண்டு இருந்த இளவரசர் ஹரி, அவருக்கு மனதளவில்உண்மையில் உதவிய மருந்தை வெளிப்படுத்தினார்.
மரிஜூவானா சிறந்த மருந்து
டாக்டர் கபோர் மேட் உடனான நேரடி கேள்வி மற்றும் பதில் பகுதியில் பேசிய இளவரசர் ஹரி, தனது போதைப்பொருள் பயன்பாட்டில், மனரீதியாக தனக்கு எந்த மருந்து சிறந்ததாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்.
Zoom
அதில் மரிஜூவானா(marijuana) தனக்கு மனரீதியாக உண்மையில் உதவிய மருந்து மற்றும் பயனுள்ள போதைப்பொருள் என்று கருதுவதாக தெரிவித்தார்.
அத்துடன் கோகோயின்(cocaine) பயன்பாடு குறித்து டாக்டர் மேட்டிடம் பேசுகையில், அது எனக்கு எதுவும் செய்யவில்லை என்று நான் நினைக்கவில்லை. "நான் உணரும் விதத்தில் இருந்து என்னை வித்தியாசமாக உணர வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஆனால் “மரிஜுவானா வேறுபட்டது, அது உண்மையில் எனக்கு உதவியது." என்று இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
Zoom
அவரது நினைவுக் குறிப்பு புத்தகமான ஸ்பேரில், இளவரசர் ஹரி பல போதைப் பொருட்களை உட்கொண்டதாகவும், எல்லாவற்றிலும் மரிஜுவானா மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.