பிரபல நடிகர் மறைவுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியம் இரங்கல்
பிரபல ஹாலிவுட் நடிகரும் அவரது மனைவியும் 2.6 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய தங்கள் வீட்டில் உயிரிழந்து கிடந்த விடயம் உலக திரைப்பட ரசிகர்களை அதிர்ச்சியும் கவலையும் அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், அவரது மறைவுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிரபல நடிகர் மரணத்துக்கு இளவரசர் வில்லியம் இரங்கல்
சூப்பர்மேன் பட வில்லன் மற்றும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்தவர் என பெரும் புகழ் பெற்ற நடிகர் ஜீன் ஹாக்மேன்.
ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
புதன்கிழமையன்று, அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஜீன் ஹாக்மேன் மரணத்துக்கு இரங்கல்கள் குவியும் நிலையில், பிரித்தானிய இளவரசர் வில்லியம் மறைந்த நடிகர் ஜீன் ஹாக்மேனுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
So sad to hear the news of the death of Gene Hackman and his wife Betsy. Hackman was a true genius of film who brought each and every character to life with power, authenticity and star quality. W https://t.co/qcqmMsHs1f
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) February 27, 2025
அவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவி பெற்சி ஆகிய இருவரது மரணச் செய்தி கேட்டு தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜீன் ஹாக்மேன் ஒரு மேதை என்றும், அவர் தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்தவர் என்றும் பாராட்டியுள்ளார் வில்லியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |