பொது வாழ்க்கைக்கு திரும்பும் இளவரசர் வில்லியம்! இயல்பு நிலைக்கு திரும்புகிறதா அரச குடும்பம்?
இளவரசர் வில்லியம் கேட் கேன்சர் அறிவிப்புக்குப் பிறகு முதல் பொதுக் கடமைகளை தொடங்கவுள்ளார்.
இளவரசர் வில்லியமின் முதல் தோற்றம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் கடந்த மாதம் தனது கேன்சர் பாதிப்பை வெளிப்படுத்திய பிறகு, இளவரசர் வில்லியம் இந்த வாரம் வியாழக்கிழமை தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்க உள்ளார்.
கென்சிங்டன் அரண்மனை செவ்வாய்க்கிழமை அன்று, இளவரசர் சர்ரே மற்றும் மேற்கு லண்டனில் உள்ள இடங்களைச் சென்று அந்தப் பகுதிகளில் உள்ள "சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் செய்யும் நிறுவனங்களின்" பணிகளை சிறப்பிப்பார் என்று அறிவித்தது.
அவரது பயணத் திட்டத்தில் உணவு விரயத்தை மற்றும் வறுமையைக் கையாக்கும் உணவு வங்கி "Surplus to Supper" மற்றும் தனியார் நிறுவனங்களின் நன்கொடையை பெறும் இளைஞர் மையம் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன.
கேட் மிடில்டன் உடல்நல பாதிப்பு
மார்ச் 22 ஆம் தேதி கேட் வெளியிட்ட வீடியோ செய்தியின் பின்னர், இளவரசரை பொதுவெளியில் காண்பது இதுவே முதல் தடவையாகும்.
அந்த செய்தியில், இளவரசி ஜனவரியில் திட்டமிடப்பட்ட வயிற்றுப் பகுதி அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குறிப்பிடப்படாத ஒரு வகையான புற்றுநோய்க்கான கீமோதெரபியை மேற்கொண்டதாக துணிச்சலுடன் தெரிவித்திருந்தார்.
சமீபத்திய வாரங்களில், கேட் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் வில்லியம் விலகியிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு சேவையை விண்ட்சர் கஸ்டலில் தம்பதியர் தவறவிட்டதும், இந்த சூழ்நிலையின் தீவிரத்தைக் குறிக்கிறது. இளவரசி கேட் எப்போது தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்குவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இருப்பினும், இளவரசர் வில்லியம் பொது வாழ்க்கைக்கு திரும்புவது, அரச குடும்பத்திற்கு இயல்பு நிலை திரும்புவதை குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |