இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி - புத்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணம்
பிரித்தானிய இளவரசியும் மன்னர் சார்ள்சின் இளைய சகோதரியுமான ஆன் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கை சென்ற பிரித்தானிய இளவரசி
இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை மையப்படுத்திய பவளவிழா நிறைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இரண்டு நாடுகளின் ராஜதந்திர உறவின் 75 வது ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் இளவரசி ஆனின் பயணம் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய இளவரசிக்கு இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசி ஆன் - வைஸ் அட்மிரல் சர் திமோத்தி லோரன்ஸ் தம்பதியினர் இன்று முதல் 13 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டு பூர்த்தி நிகழ்வுகளிலும் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பேர்க் கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோரின் இரண்டாவது பிள்ளையாகவும் ஒரே ஒரு மகளாகவும் இந்த இளவரசி காணப்படுகின்றார்.
இந்தப் பயணம் 2024 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.
மேலும் இலங்கை ஜனாதிபதி வழங்கும் விசேட இரவு விருந்துபசாரத்திலும் பிரித்தானிய இளவரசி ஆன் - லோரன்ஸ் தம்பதியினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
A lovely welcome to Sri Lanka for Princess Anne!
— Prince & Princess of Wales ? (@TribesBritannia) January 10, 2024
pic.twitter.com/wx3pfpQ3rz
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |