பிரித்தானிய பேராசிரியருக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு: சர்ச்சையைக் கிளப்பிய விவகாரம்
இந்தியாவில் நடைபெற இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்காக பிரித்தானியாவில் இருந்து வந்த பேராசிரியர் நிதாஷா கவுல்-க்கு இந்திய அரசு மறுப்பு அனுமதி மறுத்துள்ளது.
பிரித்தானியா திருப்பி அனுப்பப்பட்ட பிரித்தானிய பேராசிரியர்
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய கல்வியாளர் பேராசிரியர் நிதாஷா கவுல்(Professor Nitasha Kaul), பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது இந்தியாவிற்குள் நுழைய மறுக்கப்பட்டார்.
அத்துடன் அவர் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டதாகவும், பின்னர் பிரித்தானியாவிற்கே திருப்பி அனுப்பபட்டதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூரு வந்திறங்கியதும், குடியுரிமை அதிகாரிகள் எந்தவித காரணமும் கூறாமல் அவருக்கு நுழைய மறுப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
X இணையதள பதிவு
தனக்கு எந்த காரணமும் கூறப்படவில்லை என்றும், இந்திய அரசாங்கத்திடம் இருந்து முன்னதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பேராசிரியர் கவுல் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
தன்னிடம் நடப்பு மற்றும் செல்லுபடியாகும் பிரித்தானிய பாஸ்போர்ட் மற்றும் ஓசிஐ கார்ட் (UK passport & OCI) இருப்பதாகவும், கர்நாடக அரசால் வழங்கப்பட்ட அழைப்பிதழ்களையும் வைத்து இருந்ததாக பேராசிரியர் நிதாஷா கவுல் தெரிவித்துள்ளார்.
IMPORTANT: Denied entry to #India for speaking on democratic & constitutional values. I was invited to a conference as esteemed delegate by Govt of #Karnataka (Congress-ruled state) but Centre refused me entry. All my documents were valid & current (UK passport & OCI). THREAD 1/n pic.twitter.com/uv7lmWhs4k
— Professor Nitasha Kaul, PhD (@NitashaKaul) February 25, 2024
சர்ச்சையான விவகாரம்
இந்த சம்பவம் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கர்நாடக அரசு, மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்துள்ளது.
பேராசிரியர் கவுலுக்கு நுழைய மறுப்பு செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.
அதே சமயம், தேசிய அளவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP), பேராசிரியர் கவுல் "இந்திய எதிர்ப்பு கருத்து" கொண்டவர் என்று குற்றம் சாட்டி, அவரை அழைத்த கர்நாடக அரசாங்கத்தை விமர்சித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Professor Nitasha Kaul,
Deported from India,
Bengaluru Airport,
Denied Entry,
Karnataka Government,
Central Government,
Overseas Citizenship of India (OCI),
Due Process,
Free Speech,
Political Tensions,