இந்திய எதிர்ப்பு செயற்பாடு... குடியுரிமையை இழந்தேன்: பிரித்தானிய பேராசிரியர் கண்டனம்
இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தனது வெளிநாட்டவர்களுக்கான இந்திய குடியுரிமை (OCI) இந்திய அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டதாக பிரித்தானிய காஷ்மீரி பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
வெறுப்புக்கு எதிராக
இந்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்ட நிதாஷா கவுல், உண்மைகள் அல்லது வரலாற்றை முழுமையாகப் புறக்கணித்து, பிறருக்கு கெடுதல் செய்யும் நிலைக்கு தூண்டப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவிற்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து பிப்ரவரியில் அவர் எழுதிய முந்தைய பதிவுகளைத் தொடர்ந்து தற்போது தமது குடியுரிமை ரத்து செய்துள்ளது தொடர்பில் நிதாஷா பதிவிட்டுள்ளார்.
மேலும், வெறுப்புக்கு எதிராகப் பேசியதற்காக இந்தியாவில் கல்வியாளர்களைக் கைது செய்வது, இந்தியாவுக்கு வெளியே உள்ள கல்வியாளர்களுக்கு நாடு மற்றும் குடும்பத்திற்கான அணுகலை முடக்குவதோடு தொடர்பிருப்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றும் நிதாஷா கவுல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
உண்மையில் தற்போதைய இந்திய அரசாங்கம் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாட்டிற்குள் எங்களுக்கு சவால் விடத் துணியாதீர்கள், வெளிநாட்டவர்களுக்கு இந்தியா என்ன சொல்கிறது என்பதை பகுப்பாய்வு செய்யத் துணியாதீர்கள் என்பதே என்றும் நிதாஷா குறிப்பிட்டுள்ளார்.
கொடூரமான உதாரணம்
லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் நிர்ணயிக்கப்பட்ட OCI விதிகளின் கீழ், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக எந்தவொரு நபரின் OCI பதிவையும் இந்திய அரசாங்கம் ரத்து செய்யலாம்.
இந்த நிலையில், இந்தியாவின் இறையாண்மை தொடர்பான விடயங்களில் இந்தியாவையும் அதன் அமைப்புகளையும் குறிவைத்து பல்வேறு சர்வதேச மன்றங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஏராளமான விரோத எழுத்துக்கள், உரைகள் மற்றும் பத்திரிகை நடவடிக்கைகளில் நிதாஷா கவுல் ஈடுபட்டதாக அவர் மீது இந்திய அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக ஆய்வு மையத்தின் இயக்குநரான நிதாஷா கவுல், தனது OCI ரத்து செய்யப்பட்டதை ஒரு தீய எண்ணம், பழிவாங்கும் செயல், நாடுகடந்த அடக்குமுறையின் கொடூரமான உதாரணம் என்று கண்டித்துள்ளார்.
மட்டுமின்றி, சிறுபான்மையினருக்கு எதிரான மற்றும் ஜனநாயக விரோதக் கொள்கைகள் குறித்த அறிவார்ந்த பணிக்காக தான் தண்டிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |