ரஷ்ய பிளேக் விவகாரம்... இன்னொரு பெருந்தொற்று அபாயம்: முன்னே எச்சரித்த பிரித்தானிய ஜோதிடர்
Prophet of Doom warned of future pandemic just days before: அழிவின் தீர்க்கதரிசி எனக் கூறும் நபர் சில நாட்களுக்கு முன்புதான் வரவிருக்கும் பெருந்தொற்று குறித்து எச்சரித்திருந்தார்.
ரஷ்யாவில் பிளேக் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் ஒரு பெருந்தொற்று வரக்கூடும் என அழிவின் தீர்க்கதரிசி எனக் கூறிக்கொள்ளும் பிரித்தானியர் விடுத்த எச்சரிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மார்பைப் பாதிக்கும்
பிரித்தானியாவில் அழிவின் தீர்க்கதரிசி என அறியப்படும் Craig Hamilton-Parker என்பவரே தற்போது மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

ஏற்கனவே, கோவிட் மற்றும் எலிசபெத் ராணியாரின் மரணம் தொடர்பில் தாம் கணித்திருந்தது நிறைவேறியுள்ளதாகக் கூறிக்கொள்ளும் இவர், செப்டம்பர் 24 ஆம் திகதி தமது ஆதரவாளர்களிடம் எச்சரித்ததாக கூறியுள்ளார்.
மார்பைப் பாதிக்கும் பாக்டீரியா சார்ந்த நோயினால் எதிர்காலத்தில் ஒரு பெருந்தொற்று ஏற்படும் என்றே அவர் அப்போது குறிப்பிட்டுள்ளார். தமது வீட்டிற்கு எதிர்பாராத விதமாக வந்ததாகக் கூறப்பட்ட இரண்டு திபெத்திய துறவிகள்தான் அந்த எச்சரிக்கைக்கு காரணம் என ஹாமில்டன்-பார்க்கர் கூறியுள்ளார்.
அந்த நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த நிலையிலேயே, கடுமையான, வேகமாகப் பரவும் நுரையீரல் தொற்றான நிமோனிக் பிளேக் நோய்த்தொற்றுக்கு, 28 வயதான டார்யா ஷிபிலோவா என்பவர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.
இவர் சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் பிளேக் தடுப்பு மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டது. செப்டம்பர் மாத இறுதியில், உயிருள்ள பாக்டீரியாக்களைக் கொண்டிருந்த ஒரு சோதனைக் குழாயைத் தற்செயலாக உடைத்துவிட்டதாக ஷிபிலோவா மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து, அக்டோபர் 1 ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்ததுடன், 30 சதுர மைல் பரப்பளவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்தினர்.

இருப்பினும், பிளேக்தான் காரணம் என்பதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே, செப்டம்பர் 24 ஆம் திகதி ஹாமில்டன்-பார்க்கர் வெளியிட்டுள்ள காணொளியில், எதிர்காலத்தில் வரவிருக்கும் மற்றொரு பெருந்தொற்று குறித்த எச்சரிக்கை என்று குறிப்பிட்டு, அதில் தனது கணிப்பைப் பற்றி விவரித்தார்.
இரண்டு திபெத்திய துறவிகள் தம்மிடம் பகிர்ந்துகொண்ட விடயம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ஜனவரி 2020-இல் இவர் வெளியிட்டிருந்த ஒரு காணொளியில், சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவக்கூடிய, காய்ச்சல் போன்ற ஒரு பெருந்தொற்று ஏற்படும் என்றும் ஹாமில்டன்-பார்க்கர் கணித்திருந்தார்.
நிமோனிக் பிளேக்
தற்போது ஹாமில்டன்-பார்க்கர் தனது செப்டம்பர் மாத காணொளியில், வரவிருக்கும் பெருந்தொற்றுக்கான தீர்வு ஒன்று பண்டைய திபெத்திய நூல்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அந்தத் துறவிகள் அறிந்திருந்ததாகக் கூறினார்.
மேலும், வரவிருக்கும் பெருந்தொற்று மிகவும் ஆபத்தானது என்றும், மிக வேகமாகப் பரவக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வந்த வேகத்தில் அதை முறியடிக்க முடியும் என்றும் ஹாமில்டன்-பார்க்கர் குறிப்பிட்டுள்ளார்.

நிமோனிக் பிளேக் என்பது பிளேக் நோய்களிலேயே மிகவும் ஆபத்தான வடிவமாகும். மேலும், இது மட்டுமே தொற்று ஏற்படுத்தும் சுவாசத் துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவக்கூடியது.
அந்த நோய்க்கிருமிக்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது வீக்கம், காய்ச்சல் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடும். இதனிடையே, பிளேக் தொற்று குறித்த தகவல்களை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும், ஆனால் அது அச்சப்பட வேண்டிய ஒன்றல்ல என்றும் வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புடினின் நிர்வாகம், ஷிபிலோவாவின் மரணத்தை மூடி மறைக்க முயல்கிறது, இருப்பினும் அரசாங்கம் மூடிமறைக்க முயலவது பற்றிய பரவலான சந்தேகம் வேகமாக பரவி வருகிறது.
அந்த இளம் விஞ்ஞானியின் சக ஊழியர்கள் யாருக்கும் பிளேக் தொற்று உறுதி செய்யப்படாத போதிலும், அவர்கள் சைபீரியாவில் உள்ள அவர்களது ஆராய்ச்சி மையத்திற்குள்ளேயே பல நாட்களுக்கு முடங்கியிருக்க வேண்டியிருக்கும் என்ற தகவல் திங்களன்று வெளியானது.
கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில் உள்ள ஐந்து மருத்துவமனைகள் தொற்றுநோய் பரவல் சூழலில் இயங்கி வருகின்றன; அங்குள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களும் நோயாளிகளும் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.