பிரித்தானியாவில் இந்தியருக்கு தங்கப்பதக்கம் கொடுத்து கவுரவிக்கும் மகாராணி!
பிரித்தானியாவில் 2022-ஆம் ஆண்டின் சிறந்த கட்டட வடிவமைப்பாளருக்கான தங்கப்பதக்கம் இந்தியாவைச் சேர்ந்த பாலகிருஷ்ண தோஷிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ், ஆர்.ஐ.பி.ஏ எனப்படும், பிரித்தானியா கட்டட வடிமைப்பாளர்களுக்கான அமைப்பு இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், தலைசிறந்த கட்ட வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ராயல் கோல்ட் மெடல் என்ற தங்கப் பதக்கத்தை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த கட்டட வடிவமைப்பாளராக, இந்தியாவைச் சேர்ந்த பாலகிருஷ்ண தோஷிக்கு இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தோஷி கூறுகையில், பித்தானியா மகாராணியிடம் இருந்து ராயல் கோல்ட் மெடல் பதக்கம் எனக்கு கிடைக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இதை பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு கட்டடக் கலைக்கான உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பிரிட்ஸ்கர் விருதை பாலகிருஷ்ண தோஷி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.