பிரித்தானிய நிதியமைச்சர் வெளியிடவுள்ள செலவுத்திட்ட அறிவிப்பு - 5 முக்கிய அம்சங்கள்
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் புதிய செலவுத்திட்டத்தை இன்று (புதன்கிழமை) வெளியிடவுள்ளார்.
இதில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான தினசரி செலவுகளையும், 4 ஆண்டுகளுக்கான மூலதன முதலீடுகளையும் அறிவிக்கவுள்ளார்.
இந்த திட்டத்தில், தேசிய சுகாதாரம் (NHS), பாதுகாப்பு, மற்றும் பள்ளிகளுக்கான நிதி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப மானியத்திற்கான அரசின் யூ-டர்ன் காரணமாக சுமார் £1.25 பில்லியன் செலவு அரசுக்கு ஏற்படுவதால், மற்ற துறைகளுக்கு நிதி குறைப்பு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

முக்கிய திட்டங்கள்:
- பிரித்தானியாவின் நகரப்பகுதிகளுக்கான பொதுப் போக்குவரத்து மேம்பாட்டிற்கு 15.6 பில்லியன் பவுண்டு
- Sizewell C உட்பட அணுமின் துறைக்கு 16.7 பில்லியன் பவுண்டு
- மலிவான மற்றும் சமூக வீடுகளைக் கட்டிக்கொடுக்க அடுத்த 10 ஆண்டுகளுக்கு 39 பில்லியன் பவுண்டு
- 3 பவுண்டு பேருந்து கட்டணத் திட்டம் மார்ச் 2027 வரை நீட்டிப்பு
- வேல்ஸ் ரயில்வே மேம்பாட்டுக்கு 445 மில்லியன் பவுண்டு ஒதுக்கீடு
மேலும், Treasury-யின் Green Book விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது லண்டன் மற்றும் தெற்கு கிழக்கைத் தவிர மற்ற பகுதிகளில் முதலீடுகளை ஊக்குவிக்க உதவக்கூடும்.
இந்த அறிவிப்புகள், நாடு முழுவதும் சமூக வளங்களை சமமாக பகிரும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rachel Reeves budget 2025, UK spending review NHS schools, UK defence and transport funding, Sizewell C nuclear plant funding, UK £3 bus fare scheme extension, Treasury green book changes