நேட்டோ வான்வெளியில் உளவு பார்த்த ரஷ்ய விமானங்கள்., தடுத்து நிறுத்திய பிரித்தானிய வான்படை
நேட்டோ வான்வெளிக்கு அருகில் பறந்த ரஷ்ய உளவு விமானங்களை தடுத்து நிறுத்தியதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் (MoD) அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, நேட்டோவின் மேம்பட்ட வான்வெளி காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
போலந்து நாட்டின் மால்பார்க் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) டைபூன் போர் விமானங்கள், பால்டிக் கடல் மீது பறந்த ரஷ்ய உளவு விமானமான Ilyushin Il-20M 'Coot-A'ஐ கடந்த செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தின.
மேலும் வியாழக்கிழமை, கலினின்கிராட் வான்வெளியை விட்டு புறப்பட்ட இன்னொரு அடையாளம் தெரியாத விமானத்தையும் இடைமறித்துள்ளது.
இவை “Operation Chessman” எனப்படும் ராணுவ இயக்கத்தின் கீழ் பிரித்தானிய விமான படைக்கு இது முதல் scrambling நடவடிக்கையாகும்.
நேட்டோவின் கிழக்கு எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கையில், ஸ்வீடனுடன் இணைந்து பிரித்தானியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புப் படைகளுக்கான அமைச்சர் லூக் பொல்லார்ட் கூறுகையில், “நேட்டோவுக்கு நாங்கள் உறுதியுடன் பின்னின்றோம். ரஷ்யாவின் தீவிர நடவடிக்கைகள் அதிகரிக்கின்ற வேளையில், நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம். நேட்டோவின் புதிய உறுப்பினரான ஸ்வீடனுடன் இணைந்து செயல்படுவது பாதுகாப்பில் முக்கியமான ஒரு முன்னேற்றம்” என்றார்.
தற்போது, பிரித்தானியா 6 டைபூன் விமானங்களையும், 140-வது எக்ஸ்படிஷனரி ஏர் விங் அணியிலிருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்களையும் நேட்டோவின் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பையும், சர்வதேச உறவுகளையும் வலுப்படுத்துகின்றன
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK intercepts Russian aircraft, RAF Operation Chessman, NATO airspace security, Russian jet near NATO, UK Typhoon fighter jets, Kaliningrad airspace, NATO UK Sweden joint air mission, UK defense news 2025, UK MoD air policing mission