கேரளா சென்றுள்ள பிரித்தானிய Royal Air Force குழு., F-35B போர் விமானத்தை பழுது பார்க்க 17 நிபுணர்கள்
கேரளாவில் மூன்று வாரங்களாக பழுதான நிலையில் நிற்கும் F-35B போர் விமானத்தை பழுது பார்க்க, பிரித்தானியாவிலிருந்து Royal Air Force குழு திருவனந்தபுரம் சென்றடைந்தது.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி அவசரமாக தரையிறங்கிய பிரித்தானிய கடற்படையின் (Royal Navy) F-35B போர்விமானத்தை பழுது பார்க்க, நிபுணர்களால் நிரம்பிய விமானமொன்று ஜூலை 6-ஆம் திகதி மதியம் 12.46 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இங்கிலாந்தின் Oxfordshire-ல் உள்ள RAF Brize Norton விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், சைப்ரஸில் உள்ள RAF Akrotiri மற்றும் மஸ்கட் வழியாக பயணித்து கேரளாவிற்கு சென்றடைந்தது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 17 நிபுணர்கள் கொண்ட இந்த குழு, Lockheed Martin நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், விமானத்தை தரையிலேயே பழுதுபார்த்து மீண்டும் சேவைக்குத் திருப்ப முயற்சிக்கின்றனர்.
நடப்பு பரிசோதனை முறை தோல்வியடைந்தால், விமானத்தை ஏர்போர்ட் ஹேங்கருக்கு இழுத்து செல்லும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.
விமானத்தை இந்தியாவில் வைத்து சீரமைக்க முடியாவிடில், அதன் வால் மற்றும் இறக்கைகளை தனித்தனி பாகங்களாக கழற்றி விமானத்தை மீண்டும் அமெரிக்கா அல்லது பிரித்தானியாவிற்கு ஏற்றிச் செல்வது கடைசி விருப்பமாக கருதப்படுகிறது.
இந்த விசாரணைக்குப் பின், ராயல் ஏர்ஃபோர்ஸ் இவ்விமானத்தை மீண்டும் சேவைக்குத் திருப்பும் முயற்சியில் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
F-35B emergency landing India, Royal Air Force F-35B Kerala, F-35B grounded Thiruvananthapuram, RAF engineers India July 2025, UK fighter jet emergency landing, F-35B Lockheed Martin India, Indian airport F-35 repair, F-35B memes India, F-35B viral in Kerala, RAF jet repair in India