பிரித்தானியாவில் புதிய உச்சத்தை தொட்ட ஒமைக்ரான் பாதிப்பு!
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒமைக்ரான் கொரோனா மாறுபாடு பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்றழைக்கப்படும் புதிய கொரோனா மாறுபாடு பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த உலக நாடுகள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 633 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பதிவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். நேற்று 448 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
#OmicronVariant latest information
— UK Health Security Agency (@UKHSA) December 11, 2021
633 additional confirmed cases of the #Omicron variant of #COVID19 have been reported across the UK.
The total number of confirmed COVID-19 Omicron cases in the UK is 1,898. pic.twitter.com/407uAW76Pp
இதன் மூலம் பிரித்தானியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இங்கிலாந்தில் (618), ஸ்காட்லாந்தில் (11), வேல்ஸில் (2), வட அயர்லாந்தில் (2) பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் (1757), ஸ்காட்லாந்தில் மொத்தம் (121), வேல்ஸில் மொத்தம் (15), வட அயர்லாந்தில் (5) பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.